தமிழ் இலக்கணம்
இலக்கணம்
மொழிக்கு அழகைக் கொடுப்பது இலக்கணம். ஒரு மொழியை சரியாக எழுத பேச மற்றும் படிக்க வகுத்துள்ள கோட்பாடுகளே இலக்கணமாகும் இது மொழிச் சிதைவை தவிர்க்கும்.
தோற்றம்:
இலக்கணம் என்பது தோன்றியபின்னரே இலக்கியங்கள் மற்றும் நூல்கள் தோன்றின என்பது தவறான கருத்து. ஒரு மொழி நன்கு பலராலும் பயன்படுத்தப்பட்டபின்பே அந்த மொழிக்கு இலக்கணத்தின் முக்கியத்துவம் அதிகமாகும். அது போலவே தமிழ் மொழிக்கான இலக்கணமும் பல இலக்கியம் மற்றும் நூல்களின் தோற்றத்திற்குப் பிறகே தோன்றியது. மொழியின் முந்திய பேச்சு வழக்கு எழுத்துப்படைப்புகள் அராயப்பட்டு உருவாக்கப்படும் கோட்பாடுகளே இலக்கணமாகும்.