மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவது மொழி மற்றும் செய்கை. ஒருவருடைய செய்கைக்கான காரணமும் மற்றவருடைய செய்கைக்கான காரணமும் வேறுபடலாம். அது போலவே மொழியிலும். இதன் காரணமாக ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மற்றவர் வேறு விதமாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த மொழி இடைவெளியை தவிர்க்க மொழிக்கு இலக்கணம் இன்றியமையாதது. மொழியை அறிந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவருக்கே இலக்கணம் தேவைப்படும்போது வேற்று மொழி அறிந்தவர்கள் புதிதாக மொழியை படிக்கும் போது இலக்கணம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பேச்சு வழக்கில் மொழி பல பரிமானங்கள் மேற்கொள்ளும். இதன் காரணமாக ஒரு சாரருக்கு அம்மொழி புரியாமல் போவதற்க்கு பல வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அம்மொழி எழுத்தில் ஒரு பரிமானத்தில் மட்டுமே நிற்கும் தன்மை. இதற்கு காரணம் மொழியின் இலக்கணம் மட்டுமே.