தமிழ் இலக்கணம்
பால்
பால் பிரிவுகள்:
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால் மற்றும் பலவின்பால்.
உயர்திணை பால்கள்
ஆண்பால்: கண்ணன், பாண்டியன், பையன்.
பெண்பால்: கண்ணகி, அரசி, பெண்.
பலர்பால்: அரசர்கள், மக்கள், பெண்கள்.
அஃறிணை பால்கள்
ஒன்றன் பால்: பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம்.
பலவின்பால்: பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள்.