Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்

தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடுகளை உடையது. இவையே முத்தமிழ் என போற்றபட காரணமாக விளங்குகிறது. அகத்தியம் என்பது முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என நம் முன்னோர் கூறுவர். முத்தமிழுக்கும் இலக்கணம் இருப்பினும் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கிறது. இயற்றமிழ் என்பது செய்யுள் மற்றும் உரைநடையின் உள்ளடக்கமாகும். தொல்காப்பியம் இயற்றமிழின் முதல் இலக்கண நூலாகும்.

பிரிவுகள்:
தமிழிலக்கணம் அறிஞர்களின் பார்வையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மூன்று இலக்கணம் : எழுத்து, சொல் மற்றும் பொருள்.

ஐந்திலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி மற்றும் யாப்பு.

ஆறு இலக்கணம்: எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள், அணி மற்றும் யாப்பு.

ஏழு இலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு, செய்யுளிலக்கணம் மற்றும் பாட்டியலிலக்கணம்.