வேற்றுமை
வேற்றுமை எட்டு வகைப்படும்.
முதல் வேற்றுமை: இயல்பான பெயர். கண்ணன் வந்தான்.
இரண்டாம் வேற்றுமை: ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு. கண்ணனைக் கண்டேன்.
மூன்றாம் வேற்றுமை: ஆல்,ஓடு,உடன் - மூன்றாம் உருபுகள். கண்ணனால் அழைக்கப்பட்டேன். கண்ணனோடு சென்றேன். கண்ணனுடன் வந்தேன்.
நான்காம் வேற்றுமை: கு - நான்காம் வேற்றுமை உருபு. கண்ணனுக்குத் திருமணம்.
ஐந்தாம் வேற்றுமை: இல்,நின்று,இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள். கண்ணனில் கந்தன் பெரியவன். கண்ணன் வீட்டினின்று சென்றான். கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான்.
ஆறாம் வேற்றுமை: அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள். இது கண்ணனது பை. இவை கண்ணனுடைய பைகள்.
ஏழாம் வேற்றுமை: இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள். பையில் பணம் இருக்கிறது. கண்ணனிடம் கத்தி இருக்கிறது. வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர்.
விளி வேற்றுமை: பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும்.
முதல் வேற்றுமை விளி வேற்றுமை
கண்ணன் கண்ணா
மகன் மகனே!(ஈற்றில் ஏகாரம் மிக்கது.)
மக்கள் மக்காள்(ஈற்றயல் நீண்டது.)
முருகன் முருகா!
பிள்ளை பிள்ளாய்!(ஈற்று 'ஐ' - 'ஆய்' எனத் திரிந்தது.)