Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவம்

மார்பு


அபோசைனம் :- (கருப்பு இந்திய சணல்) அறிவியல் பெயர் அபோசைனம் கன்னாபினம் எல் அல்லது ஏ ஆன்ரோசாமிபோலியம் எல்

மருத்துவ பயன் :- இதய ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவற்றிற்கு இந்த மூலிகை மிக சிறந்ததாகும். இது தகுந்த வைத்திய ஆலோசன்யின் பேரிலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

போராஜ் :- அறிவியல் பெயர் போராகோ அபிஸிநாலி

மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் பயன்களாக சுவாசகுழாய் அடைப்பு நோய், தோல் அலர்ஜி, பேறுகாலப்பெண்களுக்கு அதிக பால்சுரக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது.

குளோவர் ரெட் :- அறிவியல் பெயர் டிரிபோலியம் பிராட்டென்ஸ்

மருத்துவ பயன் :- நரம்புகளுக்கு இந்த மூலிகை டானிக்காவும், களைப்பு நீக்கவும், குழந்தைகளுக்கு வலிமைதந்து பலவீனத்தைப்போக்கவும், இரும்பல், சுவாசநோய், மூச்சடைப்பு, புற்றுநோய், தோல்தடிப்பு நோயினையும் குணப்படுத்துகிறது.

ஹாவ்தார்ன் :- அறிவியல் பெயர் அக்ஸிகாந்தா

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது தூக்கமின்மை, கருச்சிதைவு, இதய நோய்கள், தசைகளை பலமாக்குவதுடன், குறுதி நாடி கடினமாதலை தடுத்து, இருதய அடைப்பு, மோசமான இதய செயல்பாடு மற்றும் பதட்டத்தினை தடுக்கின்றது.

ஹோர்ஹவுன்ட் :-அறிவியல் பெயர் மாறுபியம் வல்கேர்

மருத்துவ பயன் :- இந்த மூலிகை வீட்டில் குழந்தைகளின் இரும்பலுக்கு தயாரிக்கப்படும் இந்த மருந்து சுவாச அமைப்பு மற்றும் வயிறு நோயினை குணமாக்குகிறது. அதிக அளவு இந்த மருந்து தளர்வினை உண்டாக்கும்.

சாப்ரான் :- அறிவியல் பெயர் குரோக்கஸ் ஸாடிவஸ்

மருத்துவ பயன்:- இதய நோய்களை தடுக்கிறது, கொலஸ்டராலை அதிகப்படுத்தியும், வயிற்றினில் உள்ள சவ்வினை வழுவழுபாக வைக்கிறது. கர்பிணிகள் இதனை சாப்பிடக்கூடாது.

ஹார்ஸ் ரேடிஸ் :- அறிவியல் பெயர் அர்மோராசியா லபாதிபோலியா

மருத்துவ பயன் :- இதன் மூலிகை எண்ணெயை கொண்டு தசைகளை தேய்தால் தசைவலியை போக்குவதுடன், நெஞ்சு அடைப்பினை தளர்வுற உதவுகிறது. குளிர்ச்சியான உடலுக்கு கதகதப்பினையும் மற்றும் சைனஸ சொட்டுக்களை நீக்குகிறது.

ஒயில்டு செர்ரி:- அறிவியல் பெயர் புருனஸ் ஸெரோடினா

மருத்துவ பயன்:- சுவாச குழாய் அதிகப்படியான சளியடைப்புக்கு நல்லவை, உடல் பலகீனத்திற்கு காரணமான நுரையீரலுக்கு நிவாரணியாகும்.

ஐஸ்லாந் மோஸ்:-அறிவியல் பெயர் செத்ராரியா ஐலாண்டிகா

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது எல்லவகையான மார்பு நோய்களை குணப்படுத்தி, இது சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கும் பலவீனங்களை போக்கி மார்பினை பலப்படுத்துகிறது.