Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவம்

பொது


பாப்பி :- அறிவியல் பெயர் பாப்பவர் ஸாப்

மருத்துவ பயன் :- வலி, தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தொடர் இருமலுக்கு பாப்பி உபயோகமாயிருக்கிறது.

மருத்துவ பயன்:- இந்த மூலிகை ஓஸ்வேகா டீ மற்றும் பி பாம் சிகிச்சையினால் வாந்தி வருதல், குமட்டல், ஜலதோஷம் மற்றும் புளு சுரம் குணமடையச்செய்கிறது. இது எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் ஏற்படும் பரு, இரும்பல், சுரம், பதட்டம், மன அழுத்தம் மற்றும் மன சிதைவினை குணப்படுத்துகின்றன.

பிளஸ்டு திஸ்டில் :-அறிவியல் பெயர் சினிக்கஸ் பெனிடிக்டஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதுடன் இந்த உறுப்புக்களை பலப்படுத்துகின்றது. ஞாபகசக்தி பெறுவதற்கு மூளையை தூண்டுகின்றன. பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கினை குணமாக்குவதுடன் பெண்களின் மார்பக வளர்ச்சிபெற்று பால் சுரப்பதற்கும் ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.

டாஹிபோ:- அறிவியல் பெயர் டாபிபுயா ஸாப்

மருத்துவ பயன்:- இந்த மூலிகை ‘பா’ டி’ அர்கோ கிருமி நாசினி மற்றும் வைரஸ்-கொல்லியாக உடலுக்கு தேவையான சக்தியினையும், நோய் எதிர்ப்ப சக்தியினையும் தருகிறது. புற்றுநோய் மற்றும் வெண்குட்டத்தினை எதிர்க்கிறது நாட்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.

யாரோவ்:- அறிவியல் பெயர் அச்சில்லியா மில்லிபோலியம்

மருத்துவ பயன்:- இந்த மூலிகை கல்லீரலை தூண்டி நன்கு ஒழுங்குபடுத்துகிறது. இரத்த சுத்திகரிப்பாகவும் செயல்படுகிறது மற்றும் சுரப்பிகளின் மண்டலத்தை சீராக்குகிறது. இதனை அடிக்கடி உபயோகித்தால் கருத்தடையாகும். நீரிழிவு, பல்ஈறு நோய்கள், ஜலதோஷம், சுரம் புளு,பல்வலி முதலியனவற்றை குணப்படுத்துகிறது. குழந்தைபேரின் போது உடலின் உள்ளே,வெளியே ஏற்படும் ரத்த கசிவினை தடுக்கிறது. பேறுகாலப்பெண்கள் இந்த மூலிகையினை தவிர்க்கவேண்டும்

தைம் :- அறிவியல் பெயர் தைமஸ் ஸாப்

மருத்துவ பயன்:- இந்த மூலிகை சக்திவாய்ந்த கிருமி நாசினியாகும் இது சோகை, சுவாசகோளாறுநோய்கள், குடல் தொந்தரவுகள், பற்சிதைவு, பூஞ்சைகாளான் தொற்று, ஆணிக்கால் மற்றம் தோல் உண்ணிகளான பேன்கள் மற்றும் வயிற்றுப்பெருமல், ஜலதோஷத்திற்கு நிவாரணியாக உள்ளது.

சான்டல் வுட்:- அறிவியல் பெயர் சான்டாலம் அலபம்

மருத்துவ பயன்:- இந்த மூலிகையின் உடலில் குளிர்ச்சியை தந்து சுரம் மற்றும் அதிக உஷ்ணத்திலிருந்து காக்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை கல் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுநோயுக்கு உதவுகிறது.

ரோஸ் :- அறிவியல் பெயர் ரோஸா ஸாப்

மருத்துவ பயன் :- விட்டமின் சி சத்தினை கொண்ட மூலிகையான இது தோலினை பேணிக்காக்கிறது, இரத்த சுத்திகரிப்பும், தொற்றுநோயிலிருந்தும், ஜலதோஷம் மற்றும் புளு ஜூரத்தின் நிவாரணியாகவும் உள்ளது.

ரோஸ்மரி :- அறிவியல் பெயர் ரோஸ்மரினஸ் அபிஸினல்

மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது இரத்த ஓட்டபாதையினை தூண்டி நன்கு வேலை செய்வதுடன். பூச்சிகடி மற்றும் பூச்சி கொட்டுதல் (உடலின் வெளியே) இந்த மூலிகையால் சிகிச்சையளிக்கப்படுகிறது.ஒற்றைத்தலைவலி, துர் சுவாசம், பாலுணர்வு உறுப்பினை தூண்டல். நரம்பு கோளாறு, வயிறு கோளாறு, மாதவிடாய் சுழற்சி மற்றும் வலியிலிருந்து விடுபடுதல்(உள்ளுக்கு). மூட்டுவலி மற்றும் தசைவலிக்கு மேல் பூச்சாக பூசப்படுகிறது.

ரூய் :- அறிவியல் பெயர் ரூத்தா கிராவிலென்ஸ்

மருத்துவ பயன் :- உடலுக்கு வெளியே ஏற்படும் பாம்புகடி, தேள்கடி, சிலந்தி கடி மற்றும் செல்லிமீன் ஒற்றுதல் போன்றவைகளுக்கு இந்த மூலிகை உதவுகிறது. கர்பிணிப்பெண்கள் இதனை உபயோகிக்ககூடாது.

மார்ஜோராம்:- அறிவியல் பெயர் ஒரிகானம் மஜோரானா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை இரும்பல், ஆஸ்த்மாவிற்கு சிறந்த பலனை தருவதுடன், வயிறு மற்றும் குடலினை பலப்படுத்துகிறது.

ஸ்கல் கேப்:- அறிவியல் பெயர் ஸ்குயிட்டெல்லாரியா லாட்ரிபோலியா

மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது நரம்புகளுக்கு சக்தியினைதந்து நீண்டகால நரம்புநோய்களை நிவர்த்தி செய்து, பாலுணர்வினை ஒழுங்கு செய்து, காக்கைவலிப்பு, தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றினை குணப்படுத்தும் நிவாரணியாகவும் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்கின்றன.

யுக்கா:- அறிவியல் பெயர் யுக்கா சாப்

மருத்துவ பயன்:- இந்த மூலிகை மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணியாகும், கீல்வாதம், வீக்கம்,பொடுகிற்கு குணமாக்குகிறது.

சென்னா:- அறிவியல் பெயர் காசியா சென்னா

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது அதிக தளர்வினையும், அதிகளவில் உபயோகத்தினால் உடல் சுத்ததினையும் தருகிறது. நீண்டகாலத்திற்கு இந்த மூலிகையினை பயன்படுத்தக்கூடாது.

மைர்டில் :- அறிவியல் பெயர் மைர்டஸ் கொம்யுனிஸ்

மருத்துவ பயன் :- மார்புச்சளி, சிதைவு, துர் சுவாசம், காயங்கள், ஜலதோஷம், சைனஸ் மற்றும் இரும்பலுக்கு இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது.

எல்டர் :- அறிவியல் பெயர் : சாம்புகஸ் நிகிரா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை புளு மற்றும் ஜலதோஷத்தினை எதிர்த்து சுத்தப்படுத்துகின்றன. முகத்தில் ஏற்படும் கட்டி இந்த மூலிகையின் பூவின் எண்ணெய் குணமாக்குகின்றன. உலர்ந்த சருமத்திற்கும். தோலினை சுத்தபடுத்தும், இரத்த சுத்திகரிப்பு, வீக்கம், சுரம், இதமான சுவாச இயக்கம். உடலின் வெளிக்காயங்களுக்கு குணப்படுத்தனவாகவும், பூச்சி விரட்டியாகும். புதிய முற்றிய வேர் சைனடாக இருப்பதால் பேறுகாலப்பெண்கள் உள்ளுக்கு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஒரிகானோ:- அறிவியல் பெயர் ஓரிகானோம் வல்கேர்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் உபயோகம் நன்றாக வியர்வை சுரக்கவும், ஜலதோஷம் மற்றும் புளு சுரத்தினையும் குணப்படுத்துகிறது. மாதவிடாய் மற்றும் அதனைசார்ந்த பிரச்சனைகளுக்கு குணப்படுத்துகிறது, நுரையீரலையும் சுவாசபாதையினையும் சுத்தப்படுத்துகிறது.

பேசன் ப்ளவர்:- அறிவியல் பெயர் பேசிப்ளோரா இன்கர்நாட்டா

மருத்துவ பயன் :- புத்திமாறாட்டம் மற்றும் தூக்கமின்மை, பார்கின்ஸன் நோய், நரம்பு படபடப்பு, கண் தொற்றுநோய் மற்றும் கண் அழற்சி முதலியவைகளை குணப்படுத்துகிறது.

நீம் :- அறிவியல் பெயர் அஸாதிராச்டா இண்டிகா

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது காயங்கள், சுளூக்குகள், மூச்சடைப்பு, காதுவலி, தலைவலி, சுரம், தொண்டைப்புண், உணவு நச்சு, வைரஸ்நோய், ஜலதோஷம், புளு சுரம், கல்லீரல் வீக்கம்,வெள்ளயணுக்கள் பெருக்கநோய், பூஞ்சை தோற்றுநோய்கள், ஈஸ்ட் தொற்றுநோய்கள், பால்வினை தொற்றுவியாதிகள், கட்டி, தோல்வியாதி, இதயநோய்கள், இரத்த ஒழுங்கீனம், கிட்னி பிரச்சனைகள், அஜீரணகோளாறு, அல்சர், பற்சிதைவு, நரம்பு ஒழுங்கீனம்,மலேரியா, களைப்பு மற்றும் எயிட்ஸ், புற்றுநோய், நீரிழிவு, அலர்ஜி, பிறப்பினை கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது. கர்பிணிகள் உள்ளுக்கு உபயோகிக்க கூடாது.

நெட்டில் :- அறிவியல் பெயர் யர்டிகா ஸாப்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது உயர் ரத்த அழுத்ததினை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் ரத்தசோகை, களைப்பு, சுவாசநோய், மாதவிடாய் கஷ்டங்கள், படர்தாமரை, பெரிதான புரஸ்டட், சிறுநீரகபாதை பிரச்சனை, சுரம் மற்றும் ஒவ்வாமை, மூட்டுவலி,பிஎம்எஸ், வாதநோய், பேதி, பல்லில் சீழ்வடிதல், கல்லீரல் மற்றும் பிராஸ்டேட் பிரச்சனைகள், மூடடுவலிக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பேறுகாலத்திலு மிக உறுதுணையாக இருக்கிறது.

நட்மக் :- அறிவியல் பெயர் மைரிஸ்டிகா பிராக்ரான்ஸ்

மருத்துவ பயன் :- நீண்டநாள் நரம்பு பிரச்சனைகள் அதேபோல் இதய பிரச்சனைகள், ஜீரணத்திற்கு உபயோகமாக்வும் மற்றும் வாந்தியுணர்விலிருந்து மீட்கிறது. அதிகளவில் இந்த மூலிகையினை பயன்படுத்தினால் விஷத்தன்மையும், கருச்சிதைவும் பெண்களுக்கு உண்டாகும்.

ஓக் :- அறிவியல் பெயர் கூர்கஸ் ஸாப்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையினால் பேதி, மற்றும் இரத்தவடிதல் இந்த மரத்தின் பட்டைகள் அல்லது இலைகளை கொதிக்க வைத்து தடவினால் ஊமைகாயம், திசுக்களின் வீக்கம், காயத்திலிருந்து இரத்தம் வடிதல், தமணி வீக்கம் ஆகியவைகளை குணப்படுத்துகிறது.

மார்ஷ்மாலோவ்:- அறிவியல் பெயர் ஆல்தியா அபிஸினல்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது எச்சில் முழுங்கமுடியாத கடினத்தை நீக்குவதுடன் மூச்சுக்கிளை சிறுகுடலினை எளிதாக்குகிறது. அஜீரணகோளாரில் ஏற்படும், இணைப்புகளில் எரிச்சல், வீக்கத்தினை சரிசெய்கிறது. வெளி உபயோகத்தில் கோய்னா இரத்த நச்சினையும், எரிச்சல் மற்றும் இறந்த செல்லினை அப்புறப்படுத்துகிறது.

மிடோவ்ஸ்வீட் :- அறிவியல் பெயர் பிலிப்பெண்டுலா உல்மாரியா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை தலைவலி, ஜூரம், கீல்வாதம், வாதம், மாதவிடாய் பிடிப்புநோய்கள், புளு சுரம் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பேதி. இது மேலும் போதை மற்றும் ஆல்கஹால் உபயோகிப்பாளரை குணப்படுத்துகிறது.

லவாண்டர் :- அறிவியல் பெயர் லவாண்டுலா அபிஸிநாலிஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது மன அழுத்தம், மன அமைதியின்மையினை குணப்படுத்துகிறது. பதட்டம், பயம், தலைவலி மற்றும் மன அழுத்ததினை குணப்படுத்துகிறது.

லொமோன் பாம்:- அறிவியல் பெயர் மெலிஸ்ஸா அபிஸினெலிஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையினை உபயோகப்படுத்தி குழந்தைகளின் ஜூரம், புளு மற்றும் ஜலதோஷத்தினையும் வயதானவர்களின் ஜலதோஷம், தலைவலி, மன அழுத்தம், மாதவிடாய் பிடிப்புநோய், தூக்கமின்மை, பதட்ட வயிறு, கிரோவ் நோய்கள், அஜீரணக்கோளாறு மற்றும் அக்கியுண்ணிநோயினை குணப்படுத்துகிறது.

கவாகவா :- அறிவியல் பெயர் பைப்பர் மெத்திஸ்டிகம்

மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது தூக்கமின்மை, பத்தட்டம், மன அழுத்ததிலிருந்து விடுபடுதல், காயம், நரம்புகளில் வலி மற்றும் தோல் நோய்களுக்கு உபயோகமாகிறது. இதனை அதிகளவில் உபயோகப்படுத்தினால் போதை உண்டுபண்ணி கல்லிரல் பாதிக்கப்படும்.

மேரிகோல்டு:- அறிவியல் பெயர் காலென்டுலா ஸாப்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையினை உபயோகப்படுத்தி தலைவலி, காதுவலி மற்றும் ஜீரம் குறைவதற்கும். இருதய இரத்த ஓட்டத்தினை சிறப்பாக செய்வதுடன், காயங்கள் மற்றும் சிராப்புகளை குணமாக்க உதவுகிறது.

ஜூனிப்பர்:- அறிவியல் பெயர் ஜூனிபெரிஸ் ஸாப்

மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது யுரிக் அமிலத்தினை உடலிலிருந்து வெளியோற்றி பாங்கிரியாஸ் குணப்படுத்தி இதில் படிந்துள்ள அதிக திட சக்கரையினை நீக்குகிறது. இது எல்லா சிறுநீர்தொற்று நோய் மற்றும் உடலில் நீர் தேங்கியிருத்தலுக்கு உபயோகமாக இருக்கிறது. முகத்தில் உருவாகும் கட்டி, கால் ஆணி மற்றும் பொடுகுக்கு வெளிப்புற உபயோகத்திற்கு சிறந்த நிவாரணி.

ஹாய்ஸாப் :- அறிவியல் பெயர் ஹய்ஸாப்ஸ் அபிஸினல்ஸ்

மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது நுரையீரல் நோய்களை நீக்குவதுடன், காயங்களை குணப்படுத்தி, தொண்டைப்புண் மற்றும் வைரஸ் வளர்வதினை தடுக்கிறது.

கோட்டு கோலா :- அறிவியல் பெயர் சென்டில்லா ஏசியாடிக்கா

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது மனம் சார்ந்தவைகளுக்கு சிறந்ததாகும். மனதளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்துவதுடன் நரம்பு பாதிப்பினை தடுத்து மனக்களைப்பை நீக்குகிறது. வயது தளர்வு மற்றும் உடலின் பாதுகாத்து விஷத்தனை எதிர்க்கிறது

கிரீன் டீ :- அறிவியல் பெயர் காமிலியா சின்னன்சிஸ், வாரியஸ் ஸாப்

மருத்துவ பயன் :- இந்த மூலிகை புற்றுநோய் காரணமாயிருக்கிற பல கிருமிகளை குறைக்கிறது. இரத்ததின் கொழுப்பினை நிலைநிறுத்துகிறது, கொலஸ்ட்ரால் உயர்வதை தடுத்து இரத்த கொதிப்பு,உடலியக்க த்தினை தூண்டுகிறது. இந்த மூலிகையானது மனசார்ந்த களைப்பினையும், குறுதிநாடி கடினமாதலை எளிதாக்குகிறது.

கார்லிக்:- (பூண்டு) அறிவியல் பெயர் அல்லியம் சாட்டிவம்

மருத்துவ பயன் :- இந்த சக்திமிக்க மூலிகையானது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியுடையதாகும். இது செல் வளர்ச்சிக்கும், சுறுசுறுப்பையும் தூண்டுகிறது. இரத்தகொதிப்பினை குறைப்பதுடன், ஜலதோஷ நோய் மற்றும் தொத்துக்கிருமிகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

ஈச்சினாசியா:- இதன் அறிவியல் பெயர் ஈச்சினாஸியா பர்பரா

மருத்துவ பயன் :- இயற்கையான இந்த மூலிகையானது நோய்க்கட்டுப்படுத்தியாகவும் திசு, செல்களை தூண்டச்செய்பவனாகவும், புளு,ஜலதோஷத்தினை தொத்துநோயிலிருந்து எதிர்த்தும், இரத்த வெள்ளயணுக்களை உற்பத்தி செய்தும், மண்ணீரல் சுரப்பிகளை நன்றாக இயங்கச்செய்கின்றன. இந்த மூலிகையின் டீ நோய் தொத்திலிருந்த விடபடுவதுடன் தோல் புற்று நோய் மற்ற புற்று நோயிலிருந்தும் குணப்படுத்துகிறது.

ஹாப்ஸ் :- அறிவியல் பெயர் ஹமுலஸ் லுப்புலஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது தூக்கமின்மை, இரும்பல், மூத்திரைப்பை நோய், கல்லீரல் நோய் மற்றும் பதட்டம் மன அழுத்தம். பீர் மற்றும் போதைபானத்திற்கு உபயோகமாகிறது. தோலின் காய சினைப்பிற்கும் ஒவ்வாமை விஷத்தினை உடலிலிருந்து நீக்குகிறது.

ஜின்ஜர் :- அறிவியர் பெயர் சின்சிபர் அபிஸினல்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது சுவாசஅமைப்பிற்கு மிகச்சிறந்த குணப்படுத்தியாகவும் அதனை பலப்படுத்துகிறது. ஜலதோஷம் மற்றும் புளு ஜூரத்தினை எதிர்த்து அகற்றுகின்றன. தொண்டைப்புண், தலைவலி மற்றும் உடல்வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன. களைப்பு மற்றும் அஜிரண கோளாறுகள், ஜலதோஷம் மற்றும் தொண்டைப்புண்னையாற்றுகிறது.

ஜிங்கோ பிளோபா :-அறிவியல் பெயர் ஜிங்கோ பிளோபா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை ஞாபக மறதி, தலைகாயங்கள், காது இரைச்சல், சுழற்சியோட்ட பிரச்சனை, இருதய சம்பந்தமான அமைப்பினை பலப்படுத்தி, ஆண்மைக்குறைவு, ஆஸ்த்துமா, ஒவ்வாமை, சுவாசபாதிப்பு மற்றும் ஆரம்ப நிலையில் தோன்றும் அல்மைரின் நோயிற்கு உபயோகமாகிறது.

ஜின்செங் :- அறிவியல் பெயர் பானாக்ஸ் (அமெரிக்கன் ஜின்செங்),இளுத்தரோகாக்கஸ் சென்டிகோஸஸ் (சைபீரியன் ஜின்செங்), பானாக்ஸ் ஸாப்.

மருத்துவ பயன் :- எல்லாவித நோயிலிருந்து இந்த மூலிகையானது குணப்படுத்துகிறது. குறைந்த இரத்த அழுத்தம், உடல் உறுதியினை அதிகரிப்பதோடு, பாலியல் மனப்பதட்டத்தின் குணப்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் அதிக களைப்பினை நீக்குகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் இள அமைப்பினைப்போல் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது அதேபோல் அதிக சூட்டிலிருந்தும் ஒழுங்குபடுத்துகிறது.

பிவர்பிவ் :- அறிவியல் பெயர் டானாசிட்டம் பார்தீனியம்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது ஜலதோஷம்,புளு, அஜீரணக்கோளாறு, ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலி சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

கேட்நிப் :- அறிவியல் பெயர் நேபிட்டா கட்டாரியா

மருத்துவ பயன்:- வீட்டு உபயோக மருந்தாகவும் ஜலதோஷம், புளு, சுரம், வயிற்றில் மந்தநிலை, இது குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கின்றன.

ஹீத்தர் :- அறிவியல் பெயர் கல்லூனா ஸாப்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையினைகொண்டு டீ தயாரித்தால் இரும்பல் மற்றும் தூக்கமின்மையை போக்குகிறது.