Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவம்

இதயம்


பிளாக் கோஹோஷ்:- அறிவியல் பெயர் சிம்சிபியுகா ரேஸ்மோஸா

மருத்துவ பயன் :-இந்த மூலிகையினைக்கொண்டு கீல்வாயு மற்றும் இரத்த சுழற்சியினை அபிவிருத்தி செய்கிறது. இந்த மூலிகை மேலும் தாமதமாக வரும் மாதவிடாய் மற்றும் மாதவிடாயின்போது ஏற்படும் வலி நீக்குவதுடன் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளையும் நீக்குகிறது. இந்த மூலிகையினை கர்பஸ்த்ரிகள் உபயோகப்படுத்தவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதிக அளவில் இந்த பிளாக் கோஹோஷ் பயன்படுத்தினால் நஞ்சாக மாறும்.

சின்னமோன் :- அறிவியல் பெயர் சின்னமோமெம் சைலானிக்கம்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது கடின வலி நீக்கி, உடல் சுறுசுறுப்புடன் செயல்படவும் இரத்த சுத்திகரித்தும்,தொற்றுநோயிலிருந்து காக்கின்றது.

பேபெர்ரி :- அறிவியல் பெயர் மைரிக்கா செரிபேரா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை இரத்த நாளங்களை வலுப்படுத்துகின்றது. மொத்த இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கச்செய்கிறது. இந்த மூலிகையின் பேபெர்ரி டீ பிறப்புறுப்பு தொற்றுநோயினை குணமாக்குவதுடன் இந்த சாற்றினை வாயில் கொப்பளித்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், டான்சில் முதலியன குணமடைகின்றன.

யெல்லோவ் டாக்:- அறிவியல் பெயர் ருமக்ஸ் கிரிஸ்பஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது இரத்ததினை சுத்திகரித்தும், இரத்தம், தோல், சோகைநோய்களை கடுமையாக குணப்படுத்துகிறது. மண்ணீரல் மற்றும் கல்லீரலுக்கு ஊட்டமளிக்கிறது. கல்லீரலில் தேங்கியிருக்கும் போதை வஸ்துக்களை சுத்தப்படுத்தி இரத்தினையும் சுத்தப்படுத்துகிறது.

ஆனியன் :- அறிவியல் பெயர் அல்லியம் ஸேபா

மருத்து பயன் :- வெளி உபயோகத்தில் வெங்காயம் கிருமி நாசினியாகவும் உள் உபயோகத்தில் வாயு வலி, இரத்த அழுத்த குறைவினையும், இரத்த கொழுப்பினையும் குறைக்கிறது.

ஹார்ஸ் டைல்:- அறிவியல் பெயர் யூகிசெட்டம் அர்வன்ஸ்

மருத்துவ பயன் :-இந்த மூலிகையானது சிறுநீர்பாதை தொற்றுக்களை குணப்படுத்துவடன், இரத்தம் கட்டுவதற்கும், குறைவான இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதற்கும் உதவுகிறது. இது உடைந்த எலும்புகளையும் துரிதமாக குணமாக்குவதுடன், உடைந்த நகங்களையும் மற்றும் முடிகளையும், வாதநோய்களையும்,.கீல்வாதத்தினையும் குணப்படுத்துகிறது. கொதிக்கும் நீரில் இந்த மூலிகையினை போட்டு பாதங்களை நனைத்தால் கால் தளர்ச்சி நீங்கும். இது கால் ஆணியினை குணப்படுத்துகிறது. இந்த மூலிகையினை கர்பிணிகளும், செவிலியர்களும் உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.