வயிறு
கேட்ஸ் க்ளாவ் :- (புனுகு) அறிவியல் பெயர் அன்காரியா டோமென்டோஸா
மருத்துவ பயன் :- இந்த மூலிகை யுனா டி காட்டோ என அழைக்கபடுகிறது. இது சுவாசகோளாறு, வாயுகோளாறு, கட்டி, வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் குறைபாடு, நோய்க்கிருமி தொற்று ஆகியவற்றினை குணப்படுத்துகிறது. இந்த மூலிகையின் வைத்திய செவிலித்தாயின் உதவிபெற்றே வைத்தியம் மேற்கொள்ளப்படவேண்டும்.
கோராவே :- அறிவியல் பெயர் காரம் கார்வி
மருத்துவ பயன் :- இந்த மூலிகை மலச்சிக்கலையும், பசிதூண்டுதலையும் ஏற்படுத்தி மலத்தினை தளர்வாக்குகின்றன. இது மேலும் குடல் வாயு, கல்லீரல் மற்றும் பித்தநீர் சுரப்பி, கல்லீரல் பெரிதாவதினை தடுக்கின்றது.
ஆக்ரிமோனி : - அறிவியல் பெயர் ஆக்ரிமோனியா யுபோடோரியா
மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் இலைகள் கல்லீரல் நோய்க்கும், நீரிழிவு, குடல்புண் (அல்சர்), பேதி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கால்வலி, புண்கள், மெதுவாக குணமடையும் காயங்களுக்கும், பூச்சிகடிகளுக்கு இதன் இலைகளை அரைத்து பற்றுபோட்டும், ஒத்தடம் கொடுத்தும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
அல்பல்பா :- அறிவியல் பெயர் மெடிக்கோ சாடிவா
மருத்துவ பயன் : - சோகைநோய், களைப்பு, கிட்னி நோய், குடல்புண், சுரப்பி பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும் உடலில் தேவையற்ற நீரினை வெளியேற்றுகிறது. சிறுநீரக பிரச்சனை, குடல் பிரச்சனைக்கு இந்த மூலிகை மிகச்சிறந்த நிவாரணியாகும். மேலும் மது அடிமைகளுக்கு இந்த மூலிகை மிக சிறந்த மருந்தாகும்.
பிளைன்டைன் :- அறிவியல் பெயர் பிளான்டாகோ லேன்சிலேட்டா பி. மேஜர்
மருத்துவ பயன்:- உடலின் வழுவழுப்பான திரவத்தினை சுத்தம் செய்கிறது, விஷத்தினை சரிகட்டுதல், குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பிரச்சனைகள், வயிற்றுப்புண், பேதி, காயத்தினால் தொற்று முதியவைகளை நிவாரணம் அளிக்கிறது.
யுவா அர்ஸி:- அறிவியல் பெயர் ஆர்க்டோஸ்பைலஸ் யுவா-அர்ஸி
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது சிறுநீர்ப்பாதையினை பலப்படுத்துவதுடன், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை தொற்றுகள், சிறுநீர்ப்பாதை வீக்கம், நீரிழிவு, குழந்தப்பேறுக்குப்பின் கரு இயற்கையான அளவில் இருக்கவும் கருப்பை தொற்றினை தடுக்கின்றன. கர்பிணிப்பெண்கள் இதனை உபயோகிக்க கூடாது.
கோல்ட்ஸ்புட் : - அறிவியல் பெயர் துஸிலாகோ பார்பரா
மருத்துவ பயன் : இந்த மூலிகையானது சுவாசகோளாறு நீக்குவதுடன், வயிறு மற்றும் குடலினை மிருதுவாக இயக்க உதவுகின்றன. தொண்டை கரகரப்பு இஞ்சியுடன்,அதிமதுரத்தின் வேறுடன் இந்த கோல்ட்ஸ்புட் சேர்த்து தொண்டைக்கான சிரப்பினை தயாரிக்கப்படுகின்றன.
பட்சோளி :- அறிவியல் பெயர் போகோஸ்டிமோன் காப்லின், பி, பட்சோளி
மருத்துவ பயன்:- வயிற்றுப்போக்கு, பேதி, சுரமில்லாத ஜலதோஷம், வாந்தி மற்றும் வாந்தியுணர்ச்சி ஆகியவற்றினை குணமாக்குகிறது.
பெப்பர் மின்ட் :- அறிவியல் பெயர் மென்தா பைப்ரேட்டா
மருத்துவ பயன்:- பெப்பர் மின்ட் உடலினை பலப்படுத்தி சுத்தப்படுத்துகிறது. வயிற்றிலும் மற்றும் குடலினை வலு பெற செய்கிறது.
சா பால்மெட்டோ:- அறிவியல் பெயர் செரினவோ எஸ். செருலட்டா
மருத்துவ பயன்:- இந்த மூலிகை மறு உற்பத்தி சுரப்பிகள் மற்றும் உறுப்புகளை காத்து வழுவழு சவ்வினை காத்து சுவாசகோளாறு, நுரையீரல், ஆஸ்த்துமாவினை குணப்படுத்துகிறது. புரஸ்டட் சுரப்புகளை பெரிதாவதிலிருந்து காத்து சிறந்த நிவாரணியாக உள்ளது.
டாராகோன் :- அறிவியல் பெயர் அர்டிமிஸியா டிராகன் குலஸ்
மருத்துவ பயன்:- இந்த மூலிகை தூக்கமின்மை, மந்த தன்மையினை போக்கி, பசியினை தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது.
சிலிப்பரி எல்ம்:- அறிவியல் பெயர் உல்மஸ் புல்வா
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது வயிற்றில் இருக்கும் அமிலத்தினை சரிபடுத்துகிறது. அட்ரினல் சுரப்பிகளை அதிக தூண்டுகிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களின் அசுத்தத்தினை வெளிக்கொணர்கிறது. சுவாசப்பை சுழற்சிக்கு உதவுவதுடன் உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் தீக்காயம், தோல் புற்றுநோய், விஷ காயத்திற்கு இந்த மூலிகை உபயோகப்படுகிறது.
சால்மென்ஸ் சீல்:- அறிவியல் பெயர் போலிகோநாட்டம் அபிஸினேல்
மருத்துவ பயன் :- காசநோய்க்கு இந்த மூலிகையானது சிறந்த நிவாரணியாகும். நீரிழிவு, சிறுநீரக பகுதிக்கு ஊட்டமளிக்கவும், உடைந்த எலும்பினையும் குணப்படுத்துகிறது.
அமரான்த் :- அறிவியல் பெயர் அமரான்த் சாப்
மருத்துவ பயன் :- வயிற்றில் ஏற்படும் புளு சுரம், உதர சூலைநோய், வாயுதொல்லை, அஜீரணக்கோளாறு, கல்லீரல்வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு குணப்படுத்தி நிவாரணம் பெறுவதுடன் சுவாசப்பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்படுவதுடன் நமது உடலின் சக்தியினை மேம்படுத்துகின்றது. பெண்களுக்கு அடிக்கடி மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி போன்றவற்றினை குணப்படுத்துகின்றது. இந்த மூலிகையின் பயன்படுத்தும் கர்பிணிகளும் மற்றும் நீரிழிவு நோயாளிகளும் தகுந்த ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.
பாப்பி :- அறிவியல் பெயர் பாப்பவர் ஸாப்
மருத்துவ பயன் :- வலி, தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தொடர் இருமலுக்கு பாப்பி உபயோகமாயிருக்கிறது.
குய்ன் அன்னேஸ் லேஸ் :- அறிவியல் பெயர் டாகஸ் கரோட்டா
மருத்துவ பயன் :- குய்ன் அன்னே ஸ் லேஸ் மூத்திரப்பை கல், கிட்னி கல், நீர் தேக்கம், சுளுக்கு மற்றும் உடல் அலட்டலை குணமாக்குகிறது. இது மேலும் காட்டு கேரட் என அழைக்கப்படுகிறது.
வயலெட்:- அறிவியல் பெயர் வயலா ஒடேரெட்டா
மருத்துவ பயன் :- இந்த மூலிகை உட்புற அல்சர், சதைவளர்ச்சிக்கு சிறந்த பலனை தருகிறது. இதனை வெளி-உள் உபயோகத்திற்கு பயன்படுகிறது பரு, சீழ்கட்டிகள், கட்டி மற்றும் வீங்கிய சுரப்பிகளுக்கு குணப்படுத்துகிறது.
லோவாஜ்:- அறிவியல் பெயர் லெவிஸ்டிக்கம் அபிஸினெல்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது வயிறு உப்புசம், உணவுக்குழாய் நோயினை சரிப்படுத்துவதுடன், ஜலதோஷ மற்றும் புளு ஜூரத்தினை எதிர்த்து செயல்புரிகிறது.
மந்தேரேக் :-அறிவியல் பெயர் போடோபைலம் பெல்டாட்டம்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது உடலின் சுரப்பிகளை பலப்படுத்தி, தூண்டுகிறது மற்றும் தோல் நோய் பிரச்சனைகளையும் குணப்படுத்துவடன், அஜீரணம் மற்றும் நெடுநாளைய கல்லீரல் நோய்களை குணப்படுத்துகின்றன. கர்பிணிப்பெண்கள் இந்த மூலிகையினை உபயோகிக்கவேண்டாம்.
அனைஸ்:- (சோம்பு) அறிவியல் பெயர்
மருத்துவ பயன்:- உதர சூலை, வயிற்றுப்போக்குக்கும், வாயுதொல்லை, அஜீரணம் மற்றும் இரும்பலுக்கு நம்பகமான மூலிகையாகும்.
ஈவனிங் பிரைம்ரோஸ் :- அறிவியல் பெயர் ஒயினோத்ரா பியன்னிஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது கல்லீரல் மற்றும் மண்ணீரலை தூண்டபட்டு சிறப்பாக செயல்படுகிறது. பல திசு புடைப்பு, குறைந்த ரத்த அழுத்தம், இதய வலி நீக்கி குறைவான கொழுநீரினை உற்பத்திசெய்கிறது. மாதவிடாய் நோயினை தீர்க்கிறது.
முல்லின் :- அறிவியல் பெயர் வெர்பாஸ்கம் ஸாப்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது சிறந்தவலிநிவாரணியாகவும், நச்சுநீக்கியாகவும் செயல்பட்டு நன்றாக தூக்கத்தினை வரவழைக்கிறது. நுரையீரல் சளியினை தளர்வுற செய்து குணப்படுத்துகிறது.
ஆப்பில் :- அறிவியல் பெயர் பைரஸ் சப்
மருத்துவ பயன் :- மலச்சிக்கலை நீக்குவதுடன் உடலில் தேவையற்ற கொழுப்பினை களைவதுடன், இதயநோய்க்கு மிக சிறந்த கனியாகும். இதன் இலைகள் உடலில் ஏற்படும் சிராய்ப்பு மற்றும் காயங்களுக்கு மிகுந்த பயனளிக்கின்றன.
ஆஸ்ட்ரா காலஸ் :- இதன் அறிவியல் பெயர் ஆஸ்ட்ரா காலஸ் மெம்ரானாஸ் சோஸ்
மருத்துவ பயன் :- உடலுக்கு பலத்தினைஅளித்தும், அஜீரணத்தினைபோக்கியும், வளர்சிதைமாற்றநோயினை குணப்படுத்துவதுடன் நரம்பினை பலப்படுத்துகிறது, காயங்களையும், புண்களையும் ஆறச்செய்கிறது.
பிட்டோனி :-அறிவியல் பெயர் ஸ்டாச்சிஸ் அபிசினாலிஸ் (எல்) திரேவ்
மருத்துவ பயன்:- கடுமையான பேதி மற்றும் ஈறு, வாய், தொண்டை எரிச்சல் போன்றவற்றிற்கும் இந்த மூலிகையின் இலைகளை டீ போல் கொதிக்கவைத்து பருகியும், வாயைகொப்பளித்தும் நிவாரணம் பெறலாம். பேதியின்போது வயிற்றில் ஏற்படும் தசைநாரின் சேதங்களை போக்குகிறது. இந்த மூலிகையின் அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் அதிக எரிச்சல் ஏற்படும்.
புரும் :- அறிவியல் பெயர் சைடிசஸ் ஸ்கோபாரியஸ் (எல்) லிங்க்
மருத்துவ பயன் :- நீரிழிவு நோயுக்கு இந்த மூலிகை மாற்றாக பயன்படுகின்றது. இது பயன்படுத்த ஆலோசனை அளிப்பதில்லை.
பிர்ச் லீவ்ஸ் :-அறிவியல் பெயர் பெட்டுலா வேருகோசா இர்ஹ் அல்லது பி, பியுபிசென்ஸ் இர்ஹ்.
மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் தண்ணீருடன் கலந்து சிறுநீர் மற்றும் சிறுநீர்வழிபாதை தொற்றுநோயினை குணமாக்குகின்றன.
பெனுகிரீக் (வெந்தயம்) :- அறிவியல் பெயர் பினம்-கிராகம்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது நுரையீரலிலிருந்த வெளியாகும் வழவழப்பான திரத்தில் நோய்கிருமிகளை கொல்கிறது. சுரத்தின்போது எலுமிச்சை மற்றும் தேனுடன் உட்கொண்டால் உடல் நோயிலிருந்து மீளலாம் கருவுற்ற பெண்கள் யுட்ரஸ் தளர்வுக்காக இது எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பிஸ்டார்ட் :- அறிவியல் பெயர் போலிகோனம் பிஸ்டார்டா
மருத்துவ பயன் :- இந்த மூலிகையினை தண்ணிரில் கொதிக்கவைத்து நாள்முழுதும் பல தடவை குடிப்பதனால் வயிற்றுப்போக்கு, உதிரசூலை, வயிற்றுக்கடுப்பு போன்ற வியாதிகள் குணமடைகின்றன. இந்த மூலிகையின் மரத்தின் பிசினை மேலுக்கு வெட்டுகாயம், காயத்திற்கு கட்டுபோட உபயோகமாகிறது.
டான்டிலியன் :- அறிவியல் பெயர் டாரக்ஸம் அபிஸினேல்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது கல்லீரலை சீராக இயங்கச்செய்வதுடன், அடைப்புக்களை நீக்கி (கற்கள்) கல்லீரலில் சேர்ந்துள்ள விஷத்தினை நீக்குகிறது. மண்ணீரல் மற்றும் மூத்திரப்பையை குணமாக்குகிறது. மேலும் இந்த மருந்தின் மூலம் சுழற்ச்சி காலத்திற்கு முன்னமே வரும் மாதவிடாய் பிரச்சனைகளையும், இரத்தக்கொதிப்பு, இரத்தத்தில் கொழுப்பினை குறைப்பதுடன் யூரிக் அமிலத்தினையும் நிவாரணம் அளிக்கின்றது.
தில் :- அறிவியல் பெயர் அனிதம் கிராவிலின்ஸ்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது குடல்நோய், வாயு, அஜீரணக்கோளாரினை குணமாக்குகிறது.
பிளாக்பெர்ரி :- அறிவியல் பெயர் ருபஸ் வில்லோசஸ்
மருத்துவ பயன் : - இந்த மூலிகையின் இலைச்சாற்றினை வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டைப்புண்னை குணமாக்குகின்றது. இதன் வேரிலிருந்து ‘சிரப்’ தயாரிக்கப்படுகின்றது.
சிக்வீட் :- அறிவியல் பெயர் ஸ்டெல்லாரியா மீடியா
மருத்துவ பயன் :- விட்டமனி பி அதிகமுள்ள இந்த மூலிகை பலதரப்பட்ட தாதுக்களும் உள்ளடங்கியது. சுவாச குழாய் அடைப்பு நோய், நுரையீரல் வீக்கநோய், இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றினை குணப்படுத்தும் நிவாரணியாக இருக்கிறது. வெளிப்புறத்தில் தோல்நோய், இந்த மூலிகையின் டீ சேர்த்து குளித்தால் தோல் எரிச்சலிலிருந்து குணமடையலாம்.
ஐவி :- அறிவியல் பெயர் ஹெட்ரா ஸாப
்
மருத்துவ பயன் :- தொண்டைப்புண், அல்சர் மற்றும் உடல்தோல் தடிப்பிற்கு சிறந்த நிவாரிணியாகும்.
ஐபிரைட் :- vயுபாராசியா அபிசியானாலிஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது கல்லீரலின் விஷத்தினை நீக்குவதுடன், கண்களின் உள்ளோயும், வெளியேயும் ஏற்படக்கூடிய நோயினை குணப்படுத்துகிறது. கண்ணை பலப்படுத்துனவாக, கண் சிதைவினை சரிபடுத்துகிறது.
பாசில் :- (துளசி) அறிவியல்பெயர் ஓசிமம் பாசிலிக்கம்
மருத்துவ பயன் :- வயிற்று உப்புசம்,, வாந்தி, சுரம், சீதளம், புளு, தலைவலி, கக்குவான் மற்றும் மாதவிடாய் வலி, வயிற்றி அதிகப்படியாக சுரக்கும் ஆசிட் குறைப்பதுடன், குணப்படுத்துவனவாக உள்ளது. விஷக்கடிகளுக்கும் இந்தமூலிகை வெளி உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த மூலிகை மேலும் வயிற்றில் உள்ள குடல் புழுக்களையும் நீக்குவதுடன் தோலில் ஏற்படும் பருவினை இந்த மூலிகையின் எண்ணையை தடவி குணமடையலாம்.