Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவம்

பல்


ஆல்ஸ்பைஸ் :- அறிவியல் பெயர் பிமென்டா டியோஐகா

மருத்துவ பயன் :- பல்வலி, வாய் துர்நாற்றத்தினை நீக்கி, புதிய சுவாசத்தினை பெறவும் இந்த மூலிகை மிக சிறந்த மூலிகையாகும்.

எலிகாம்பேன் :- அறிவியல் பெயர் இனுலா ஹெலினியம்

மருத்துவ பயன் :- இந்த மூலிகை குடல் புழுக்களை நீக்கியும், பல் சொத்தையாவதை தடுத்து ஈறுகளுக்கு உறுதியளிக்கின்றன. வெளிக்காயங்களையும், ரணங்களையும் மூலிகை கொண்டு கழுவி குணமடைகின்றன. பூச்சி விரட்டியாக இந்த மூலிகை இருக்கின்றது.

யுகலிப்டஸ் :- அறிவியல் பெயர் யுகாலிப்டஸ் குளோபுளஸ்

மருத்துவ பயன் :- இந்த மூலிகை நோய் கட்டுப்படுத்தியாக இதன் எண்ணெய் பல்லீறு சீழ் வியாதியினை குணப்படுத்துகிறது. தீப்புண் காயத்தினை ஆற்றுவதுடன் தொத்துகிருமிகள் பரவாமல் தடுக்கின்றது. இந்த மூலிகையின் இலை மற்றும் தண்டினை ஆவிபிடித்தால் சைனஸ் நோயிலிருந்து விடுபடலாம். இந்த மூலிகையின் வெஜிடபிள் எண்ணெய்யுடன் அல்லது தண்ணிருடன் தெளித்தால் சிறந்த பூச்சி விரட்டியாக இருக்கிறது.

பிளட் ரூட் :- அறிவியல் பெயர் சாங்குய்னாரியா கானாடேனிசஸ் எல்.

மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது பற்குழி ஏற்படும் நோயினை குணப்படுத்துகிறது.

குளோவ்ஸ்:- அறிவியல் பெயர் யுஜினியா கோரியோபைலட்டா

மருத்துவ பயன் :- இந்த மூலிகை பல்வலிக்கு சிறந்த நிவாரணி, இந்த மூலிகையின் எண்ணையை பற்களில் நேரிடையாக தடவினால் பற்குழி ஏற்படும், ஜலதோஷம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிக உதவியாக பயன்படுகிறது. ஜீரத்தின்போது அதிக வியர்வையை வெளியேற்றவும், கக்குவான், புளு சுரம் கிராம்பு நல்ல பலனை தருகிறது. பேறுகாலத்தின்போது ஏற்படும் வாந்தியை மட்டுப்படுத்துகிறது.

மைர்ஹ்:- அறிவியல் பெயர் கொமிபோரா மைர்ஹ்

மருத்துவ பயன் :- பலமான, சக்திவாய்ந்த,கிருமிகளை தடுக்கிற சுத்தப்படுத்துகிற பொருளாக குணப்படுத்துகிறது. உடல் பிணியிலிருந்து விரைவில் குணமாகவும், அடிக்கடி வாய்கொப்பளித்தல், பல்லீறுகளை காத்து ஈறுநோய் வராமல் தடுக்கிறது.