மாதவிடாயினை
புளுகோஹோஷ் :- அறிவியல் பெயர் காலோபைலம் தாலிக்ட்ராய்டஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது மாதவிடாயினை ஒழுங்கு செய்வதுடன், குழந்தைப்பேறு அடைந்தவுடன் பிரசவம் சுலபமாக குழந்தைபெறவும் இந்த மூலிகை உபயோகப்படுகின்றது. கர்பிணிப்பெண்கள் இந்த மூலிகையின் பயன்படுத்தக்கூடாது.
சாம்மோமையில் :- அறிவியல் பெயர் மாட்ரிகாரியா சாம்மோமையில்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் டீ நரம்புகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்குகிறது. இந்த டீ குழந்தைகளுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் பருகினால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். தூக்கமின்மையை போக்கி குணப்படுத்துகிறது.
கிராம்பார்க் :-அறிவியல் பெயர் விபர்னம் ஓபுளஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மாதவிடாய் பிரச்சனைகளையும், பிள்ளபேற்றுக்குப்பிறகு, கருச்சிதைவு ஏற்படாமலும், அதிக இரத்தப்போக்கினையும் குணப்படுத்துகிறது.
டாமியானா:- அறிவியல் பெயர் டுர்நேரா டியுப்புஸா
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சியின் ஓழுங்குபடுத்துகின்றன. பாலூணர்வை தூண்டியும், சிறுநீரகப்பிரச்சனையை குணமாக்கியும், பய உணர்வு, கோபவுணர்வினை குணமாக்குகின்றன.
டோங்க் குவாய் :- அறிவியல் பெயர் ஏன்ஜலிக்கா சின்னின்செஸ்
மருத்துவ பயன் :- பெண்களுக்கு ஹார்மோன்களை சரிபடுத்தும் இந்த மூலிகையானது பெண்களுக்கு கரு உருவாக இந்த மூலிகையானது சிறந்த பலனை தருகிறது.
டிராகன்ஸ் பிளட் :- அறிவியல் பெயர் டிமானோரோப்ஸ் டிராக்கோ
மருத்துவ பயன் :- உடலில் இரத்தவடிதலை இந்த மூலிகையின் பிசின் தடுக்கின்றது. உடலில் ஏற்படும் மார்பு வலிகள், பேறுகாலத்திற்கு பிறகு இரத்தபோக்கு, திடீரென ஏற்படும் உள்காயங்கள், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்துகிறது.
பால்ஸ் யுனிக்கார்ன் :- அறிவியல் பெயர் சாம்லிரியம் லுத்தியம்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது வயிற்றுப்பிரச்சனையை தீர்த்து இதமாக்குகிறது. ஆண் மற்றும் பெண் பிற மறு உற்பத்திசெய்யும் உறுப்புக்கள் தூண்டப்படிகிறது. மாதவிடாய் நிற்கும்காலத்தில் இந்த மூலிகையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கருப்பையின் ஒழுங்கீனமின்மை, தலைவலி மற்றும் மன அழுத்ததிற்கு நல்ல பலனைதருகிறது.
பென்னல் :- அறிவியல் பெயர் பெனிகுலம் வல்கேர்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது அஜீரணம், இரும்பல் மற்றும் பசியைதூண்ட குணப்படுத்துகிறது. புற்றுநோயாளிகள் ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் பயன்படுத்துவதால் பெண்களுக்கு அதிகளவில் பால் சுரக்கிறது.
பிளாக்ஸ் :- அறிவியல் பெயர் லின்னம் உசிட்டாஸ்டிஸ்ஸியம்
மருத்துவ பயன் :-இந்த மூலிகையானது இரத்தநாடியினை பராமரித்து ஆரோக்கியமடைய செய்கிறது. மாதவிடாய்நிற்கும் காலத்தில் தளர்வு தருகிறது. இதன் விதைகள் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் எண்ணெய் சிறுநீரக பிரச்சனையை மெல்ல குணமாக்குவதுடன், தோல் வியாதியினையும் நிவர்த்தி செய்கிறது.
பிராங்கின்சென்ஸ் :- அறிவியல் பெயர் போஸ்வெளியா கார்ட்டேரி
மருத்துவபயன் :- இந்த மூலிகையானது மாதவிடாய் வலியிலிருந்து மீட்கிறது. கீல்வாத வாயு மற்றும் வலியிருந்து நிவாரணம் அளிக்கிறது. உடலின் வெளியே ஏற்படும் காயத்திற்கு பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.
கோல்டன் சீல் :- ஹைட்ராஸ்டிக் கோனாடென்சிஸ்.
மருத்துவ பயன்:- கருவுற்ற பெண்களுக்கு அழுகாமல் காக்கும் மருந்தாக இந்த மூலிகை பயன்படுகிறது. இந்த மூலிகையானது நேரிடையான இரத்த சீரமைப்பு மற்றும் தொத்துவியாதிலிருந்து நீக்கி உடலின் கல்லீரலை குணப்படுத்துகிறது.
ஹென்பேன் :- அறிவியல் பெயர் ஹயோஸைகாமஸ் நைஜர்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது வலியினை நிறுத்தி, வியர்வையின்போது உப்பினை குறைவான தாக்குகிறது. இந்த மூலிகையினை கர்பபெண்கள் மற்றும் பலவீனமான குழந்தைகளுக்கு ஆலோசிப்பதில்லை இது சிறிதளவு வெளி உபயோகத்திற்கு பயன்படுத்தலாம், அடிக்கடி பயன்படுத்த கூடாது.
ஜாஸ்மின் :- அறிவியல் பெயர் ஜாஸ்மின் அபிஸினெல்
மருத்துவ பயன் :- ஜாஸ்மின் டீ மன அமைதி ஏற்படுத்தி பாலுணர்வினை தூண்டுகிறது. ஜாஸமின் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் தோல் பளபளப்பும், மாதவிடாய் மற்றும் மன அழுத்ததினையும், நரம்புநிலைகளையும் குணப்படுத்துகிறது.
கெல்ப்:- அறிவியல் பெயர் புகஸ் வெர்ஸிகுலோஸஸ்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது சுரப்பிகளை பலப்படுத்தி நன்கு இயங்கச்செய்கிறது. தைராய்டினை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தி வளர்சிதைமாற்றத்தினை செய்கிறது. கர்பிணிகளுக்கு நல்ல குழந்தைவளர்ச்சிக்கு உதவுகிறது.
லிக்கரைஸ்:- அறிவியல் பெயர் கிளைசைர்ஸா கிலாப்ரா
மருத்துவ பயன்:- இந்த மூலிகை பெண்களின் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் சுரப்பதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இது இரும்பல் மற்றும் மார்புநோய்கள் மற்றும் வயிறு,.இதய பிரச்சனைகளை குணப்படுத்துகிறது, அஜீரணக்கோளாறு மற்றும் சுவாச நோய்பிரச்சனைகளை தீர்க்கிறது. இந்த மூலிகையினை கர்பிணிப்பெண்கள் உபயோகப்படுத்தவேண்டாம்.
மக்வர்ட்:- அறிவியல் பெயர் அர்டிமிஸியா வல்கரைஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது பதட்டம், நடுக்கம், தூக்கமின்மை, மாதவிடாய் சிக்கலினை தீர்க்கிறது. அடிக்கடி உபயோகப்படுத்தினால் கல்லீரல் தூண்டப்பட்டு, ஜீரணத்திற்கு உதவுகிறது. கர்பிணிப்பெண்கள் இதனை உபயோக படுத்த கூடாது.
பென்னி ராயல்:- அறிவியல் பெயர் மென்தா பல்ஜியம்
மருத்துவ பயன் :- பென்னி ராயல் மூலிகை வாயுவினை நீக்கி அஜீரணக்கோளாரினையும், மாதவிடாயுக்கு முன்னதாக அதிக ரத்தபோக்கு, ஜலதோஷம், வயிறு கோளாறு, பெல்விஸில் ரத்த பாய தூண்டுதலை செய்கிறது. கர்பிணிப்பெண்கள் இந்த மூலிகையினை உபயோகப்படுத்தகூடாது.
பியனி:- அறிவியல் பெயர் பியனியா அபிஸியல்ஸ்
மருத்துவ பயன் :- பியனி வேர் மாதவிடாய் வலிப்புநோய்கள், மாதவிடாய் ஒழுங்கின்மை,
மூட்டுவலி, ஆஸ்த்மா மற்றும் அதிகளவில் உணர்ச்சிவசப்படுதலினால் நரம்புகள் பாதிப்பினை இந்த மூலிகையான பியனி வேர் குணமாக்குகிறது.
ராஸ்பெர்ரி :- அறிவியல் பெயர் ருபஸ் இடயஸ்
மருத்துவ பயன்:- கரு காலத்தில் பெண்களின் கரு சுவற்றினை பலப்படுத்துகிறது, குழந்தைபேரின் போது வலி குறைவாகவும் உதவுகிறது, எளிதான மாதவிடாய் சுழற்சி அதிக ரத்தபோக்கு, சிறுவர்களுக்கு ஏற்படும் வாந்தியுணர்வு ஒழுங்குமுறை மற்றும் குழந்தைக்கு ஏற்படும் பேதி. குழந்தை பேறுக்கு பிறகு கருப்பை வீக்கம் இரத்த வடிதலை குணப்படுத்துகிறது.
ஸ்பியர் மின்ட்:- அறிவியல் பெயர் மென்தா விரிடிஸ்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது கர்பகாலத்தின்போது வாந்தியெடுத்தலை நிறுத்துகிறது. குடலினை மிருதுவாக்கி ஜலதோஷம், புளு மற்றும் வாயுவிலிருந்து குழந்தைகளை காக்கிறது.
ஸ்குவாவ்வைன்:- அறிவியல் பெயர் மிட்செல்லா ரிப்பென்ஸ்.
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது குழந்தைபெற கருப்பையினை பலப்படுத்துகிறது. கருச்சிதைவினை தடுத்து கருப்பைக்கும், கருமுட்டைக்குமுள்ள நொரிசலிலிருந்து மீட்கிறது. பிறப்புறுப்புதொற்றுநோயிலிருந்து சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
வெலரியன்:- அறிவியல் பெயர் வெலரியானோ அபிஸினாலிஸ்
மருத்துவ பயன்:- இந்த மூலிகை தூக்கமின்மை,பதட்டம், படபடப்பு மற்றும் வலியினை அமைதியடையசெய்து, இதயத்தினை பலப்படுத்தி, குறைந்த இரத்த அ.ழுத்ததினையும் சரிபடுத்தி, ஐபிஎஸ், மாதவிடாய் வலிகளையும் மற்றும் திடீர் தசை எழுப்பல் போன்வற்றினை நிவர்த்தி செய்கிறது. இதன் அடிக்கடி உபயோகித்தால் அமைதி தரும்.
வெர்வைன் :- அறிவியல் பெயர் வெர்பினா அபிஸினெல்
மருத்துவ பயன்:- இந்த மூலிகை கல்லீரல் நோயினை குணப்படுத்துவதுடன், களைப்பு, கடுஞ்சோர்வு, சுரம், தூக்கமின்மை, ஆஸ்த்துமா, குழந்தப்பேறுக்குப்பின் மன அழுத்தம், மலேரியா, பேதி, மாதவிடாய் வலி. ஒழுங்கற்ற மாதவிடாய், பால் அதிகம் சுரக்கும்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம். கர்ப காலத்தில் உபயோகிக்க கூடாது.
வீடெக்ஸ்:- அறிவியல் பெயர் வீடெக்ஸ் அக்னஸ்-காஸ்டஸ்
மருத்துவ பயன்:- மகப்பேறு இன்மையினை நீக்கி குழந்தை உருவாக இந்த மூலிகை குணப்படுத்துகிறது. மேலும் இந்த மூலகை பிஎம்எஸ், மாதவிடாய் நிற்கும் தருவாயில் ஏற்படும் பிரச்சனைகளையும், ஹார்மோன்கள் சரிவிகிதமாக்குகிறது.
ஒயில்டு யாம் :- அறிவியல் பெயர் டியஸ்கோரியா வில்லோஸா
மருத்துவ பயன்:- கல்லீரல் மற்றும் என்டோக்ரைன் முறைகளை சீரமைக்கிறது. இது மேலும் பெண்களின் இயக்க முறைகளை குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் போஷாக்கின்மையினை நிவர்த்தி செய்கிறது.
வோம்வுட்:- அறிவியல் பெயர் ஆர்ட்மிசியா அபிசிந்தம்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது சீரணமண்டலத்தை குணப்படுத்துகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை நோய்களை நிவர்த்தி செய்தும், ஒழுங்கீன மாதவிடாய்களையும், வலிகளையும் சீறாக்குகிறது.