இயற்கை மருத்துவம
காது, மூக்கு, தொண்டை
காது குத்தல் சரியாக:-
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் மிளகளவு பெருங்காயத்தைப் பொரித்து காயத்தை நீக்கிவிட்டு இளஞ்சூட்டில் சில துளிகள் காதில் விட சரியாகும்.
காதில் சீழ்வடிதல் குணமாக:-
மாதுளம் பழச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி சில துளிகள் காதில் விட குணம் தெரியும்.
காது குடைச்சல் குணமாக:-
குப்பைமேனி, கோழியவரை இலைகளைச்சாறு பிழிந்து சம அளவு எடுத்துக் கலந்து காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
மூக்குப்புண் ஆற:-
சுட்டுக் கரியாக்கிய மஞ்சளைப் பொடி செய்து வேப்பெண்ணெயில் குழைத்துத் தடவப்புண் ஆறும்
மூக்கில் நீர் வடிதல்:-
வேப்பிலையையும், ஓமத்தையும் விழுதாக அரைத்து நெற்றி கழுத்து பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
தொண்டைக் கட்டு சரியாக:-
உலர்ந்த மாவிலையைச் சுட்டு அந்தக் கரியை நீரில்போட்டுக் குடிக்க சரியாகும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
தொண்டை கரகரப்பு
1. சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2. தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு, ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும்.
3. நிலவேம்பு கஷாயத்தில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்க கரப்பான் தீரும்.
தொண்டை எரிச்சல் சரியாக:
ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும்.