Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
இயற்கை மருத்துவம

இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு...



இன்றைக்கு இரவுப் பணி என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பி.பி.ஓ., கால்சென்டர் நிறுவனம், ஷாப்ட்வேர் நிறுவனம், செக்யுரிட்டி, காவலர்கள் என பல துறைகளில் இரவு பணி அதிகமாகி விட்டது. அவர்கள் இரவு நேர தூக்கத்தை எப்படி ஈடுகட்டுவது?

அடிக்கடி ஷிப்டை மாற்றக்கூடாது.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் மாறலாம்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு வேலை செய்தால் ஒருநாள் முழுவதும் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

இரவு வேலை முடிந்ததும் காலைவரை அங்கேயே தூங்குவது நல்லது.

இரவு பணியின் போது தூக்கம் வந்தால் கொஞ்ச தூரம் நடந்தால் தூக்கம் போய்விடும்.

இரவு வேலையில் முழுமையான வெளிச்சம், காற்றோட்டம் இருக்க வேண்டும்.

இரவு வேலையில் இருப்பவர்கள் அதிக நேரம் பகலில் தூங்குவது நல்லது.

வாகனம் ஓட்டும் போது தூக்கம் வந்தால் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்டுவது மிகவும் நல்லது.

படிக்கும்போது பெரும்பாலும் தூக்கம் வந்துவிடும். அப்படி வரும்போது நன்றாக தூங்கிவிட்டு படிக்கலாம்.