Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
இயற்கை மருத்துவம

தலை


தலை நோய் குணமாக:-

ஒரு பங்கு நல்லெண்ணெயில் இரு பங்கு வல்லாரைச்சாறு கலந்து நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.

தலைவலி

1. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்
தலைமுடி பளபளப்பாக:

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

முடி உதிர்தல் நிற்க:-

(1). வெந்தயத்தை நீர் விட்டரைத்து தலையில் தேய்த்துத் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் குளித்து வர முடிகொட்டுவது நிற்கும்.
(2). 50 கிராம் குன்றிமணி, 2 மேசைக்கரண்டி வெந்தயம் ஆகிய இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணையில் போட்டு ஒரு வாரத்திற்குப்பின் வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இதைத்தலைக்குத் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.

முடி அழகு பெற:

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

பேன்களை ஒழிக்க:

1. கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
2. வினிகரை எடுத்து நீருடன் கலந்து தலையின் எல்லாப் பகுதியிலும் பரவுமாறு அழுந்த தேய்த்து மஜாஜ் கொடுத்து அரரமணி நேரம் ஊறவைத்தால் பொடுகு தொல்லை நீங்கும். 1 பங்கு வினிகருக்கு ஆறு பங்கு நீர் கலக்க வேண்டும். ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். குளிக்காமலும் விடலாம்.

வழுக்கை மறைய:

அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பால்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.