சித்த மருத்துவம்
காது, மூக்கு, தொண்டை
இருமல் குணமாக:
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக்கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
இளைப்பு, இருமல் குணமாக:
விஷ்ணுகிராந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக:
குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.
இருமல் தொண்டைவலி குணமாக:
மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
வரட்டு இருமல் குணமாக:
கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
மூச்சுத்திணறல்:
தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
இருமல் குணமாக:
காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
மூக்கில் நீர்வடிதல் குணமாக:
ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க் காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
தொடர் இருமல் குணமாக:
கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.
மூக்கு சம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக:
மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
இருமல் நிற்க :
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
வரட்டு இருமல் குணமாக:
மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊறவைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும்.
கண்டங்கத்தரி வேர் 40 கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அரிசித் திப்பிலி 50 கிராம், சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100. மி.லி. வீதம் தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற:
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து மை அரைத்து புண்மீது தடவ குணமாகும்.
மூக்குசம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்ளவேண்டும். ஊறிய உமிழ்நீரை முழுங்கிவிடவும்.
தொண்டைப்புண் ஆற:
வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் நெய்யும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.