சித்த மருத்துவம
தலை
தலைவலி குணமாக:
i. விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
ii . கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமமாக கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.
iii . திருநீற்று பச்சிலைசாறு, தும்பைச்சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.
தீராத தலைவலி நீங்க :
தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.
தலைப்பாரம் குறைய :
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:
சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
தலைபாரம், நீரேற்றம் நீங்க:
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
கடுமையான தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
பெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க:
நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலரவைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
தலைப்பாரம் குறைய :- தும்பைப்பூவை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைப்பாரம் குறையும்.
தலை பாரம் குணமாக:
நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.
ஒற்றைத் தலைவலி குணமாக:
1. தேத்தாங்கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்த் தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.
2. துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.
பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:
நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி ½ லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
பித்த வாந்தியை நிறுத்த:
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
வாந்தி நிறுத்த:
வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
தீராத வாந்தி நிற்க :
‘சதகுப்பை’ என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிண்டாய் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்பண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.