Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
சித்த மருத்துவம்

இதயம்


மூச்சு வாங்குதல் :

தூதுவளை உண்பதால் குணமாகும்.

நெஞ்சு தடுமன் குணமாக:

வெற்றிலை சாறு, இஞ்சி சாறு கண்ணாடி டம்ளரில் வைத்து தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேன் சேர்த்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டி வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

ஆஸ்துமா குணமாக:

1. வில்வ இலை பொடி தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.

2. கண்டங்கத்தரி பொடி 100 கிராம், சுருள்பட்டை பொடி 100 கிராம், திப்பிலி பொடி 50 கிராம், பெருங்காயம் 10 கிராம் ஒன்றாக கலந்து பாட்டிலில் வைக்கவும், இதை காலை,
மாலை ½ கரண்டி வெந்நீர் அல்லது பாலில் சாப்பிட்டு வர ஆஸ்துமா தலைவலி, சளி, தும்மல் குணமாகும்.