யோகாசனம்
யோகாசானம் ஏன் செய்ய வேண்டும்?
நாளாமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும்
மனித உடம்பில் குழலற்ற சதைக் கோளங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், எந்தெந்த ஆசனங்களைச் செய்தால் எந்தெந்தக் கோளங்கள் நன்கு வேலை செய்யும் என்பதையும் பார்த்தோம். அக்கோளங்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்களால் உடலில் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தால் யோகாசனம் செய்வதன் அவசியத்தை நாம் உணர்வோம். பல்வேறு நோய்களுக்கு இக்கோளங்கள் சரியாக இயங்காததே முக்கிய காரணமாகும்.
சுரப்பிகள்:-
ஹார்மோன்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போதுதான் உடலில் செய்கைகள் செம்மையாக நடைபெறும். இந்த அளவு மாறுபடும்போது, அதாவது கூடினாலோ குறைந்தாலோ உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. எனவே இந்தச் சுரப்பிகள் ஒவ்வொன்றையும் சரியாக இயங்க வைக்க யோகாசனங்கள் சிறந்த உபாயமாக உள்ளன என்பதைப் பல்வேறு இரசாயன சோதனைகள் மூலம் மேல்நாட்டர் கண்டபின்னரே இவ்வசனத்தைப் பெரிதும் விரும்பிக் கற்று வருகின்றனர்.
கணையம் (Pancreas) :- இச்சுரப்பியானது வயிற்றின் உள்பகுதியில் முதுகெலும்பின் முன்னால் இருக்கிறது. சுரப்பிகளில் பெரியது. இரைப்பைக்குக் கீழ் 9 அங்குல நீளமும் 4 அங்குல அகலமும் உள்ளது. இச்சுரப்பியின் சீர்கேட்டால் நோய் உண்டாகிறது.
கணையத்தைச் சரியாக இயங்க வைக்கும் யோகாசனங்கள் :-
இச்சுரப்பியை பச்சிமோத்தானம், பவன முக்தாசனம், யோகமுத்ரா, தனுராசனம், ஹலாசனம், நாவாசனம், உத்தானபாத ஆசனம், சலபானம் ஆகியவற்றில் ஏதேனும் ஓன்றால் கூட சிறப்பாக இயங்கச் செய்து நாள்பட்ட நீரிழிவைப் பூரணமாகக் குணப்படுத்திவிடலாம்.
கணைய நீர் (இன்சுலின் – Insulin) :-
இன்சுலின் குளுகோசை மூன்று வழிகளில் திரும்ப ப்பெறுகிறது. அது தசைகள், கல்லீரலில் கிளைக்கோஜினின் அளவைக் கூட்டுகிறது. குளுகோசைத் தன்மயமாக்கி கரியமிலவாயுவாகத் திசுக்களிலே மாற்றுகிறது. இது குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்களாக கல்லீரலிலோ மாறும் வேகத்தை அதிகரித்து ஏராளமான குளுகோஸ் (சர்க்கரை பொருள்கள் அல்லது மாவுப் பொருள்கள்) சாப்பிடும்போது, அவை கல்லீரால் கொழுப்பு அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இன்சுலின் இப்பணியை ஊக்குவிக்கிறது.
இன்சுலின் சுரப்புக் குறைவால் ஏற்படும் கேடுகள்:-
மிகையான பசி, அசதி, நடப்பதில் சிரமம், ஒரே ஹார்மோனாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீரிழிவு நோய் உண்டாகும். அதிக சிறுநீர் கழியும், சமநிலையில் மூச்சுவிட முடியாது. இருமல்வரும், மயக்கம் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கும்.
பிட்யூட்டரி சுரப்பி (Pituituary Gland) :-
மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு கம்பியினால் இணைக்கப்பட்ட சுரப்பி இது வேலை குருத்தெலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. திசுக்களின் மீதான வளர்ச்சியை அதிகரிக்கிறது. தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்கிறது. புரத உற்பத்தியை அதிகரிக்கிறது. இன்சுலின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டுகிறது. நினைவாற்றல், சிந்தனா சக்தியைத் தூண்டும் விந்து அணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பால் உணர்வு கேந்திரங்களைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம் சம்பந்தமான ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தைராய்டு சுரப்பி :-
தைராய்டு சுரப்பியானது தொண்டையின் அடிப்புறத்தில் அமைந்திருக்கிறது. மிக அதிகமான இரத்த ஓட்டமுடைய இச்சுரப்பி தைராக்ஸின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது முக்கிய நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
தைராக்ஸின் பணிகள்:-
சக்தி உற்பத்தியை அதிகரிப்பதோடு, உட்கொள்ளும் வாயுவின் அளவையும் அதிகரிக்கிறது. கல்லீரல், இதயத்தில் உள்ள கிளைக்கோஜினை இடப் பெயர்ச்சி செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து நைட்ரஜனை அதிகமாக வெளியேற்ற உதவுகிறது. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்துடிப்பிற்கு உதவுகிறது. வைட்டமின் ‘A’ தயாரிப்பில் உதவுகிறது. எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பால் உறுப்புகளின் வளர்ச்சி, மன வளர்ச்சி, மைய நரம்பு மண்டல வளர்ச்சியிலும் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.
தைராக்ஸின் குறைவால் ஏற்படும் கேடுகள்:-
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படும் எலும்பு வளர்ச்சி தடைப்படும். தோலில் சுருக்கம் ஏற்படும். பால் உணர்வு தடைப்படும், முகம் ஒளி இழந்து வாயில் கோழை வடியும். சிந்திக்கும் திறன் குறையும் பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படும். கன்னம் கனத்து சோகை மாதிரி காணப்படும். சிறுநீரில் நைட்ரஜன் அளவு குறையும். உடலில் வெப்ப நிலை கூடும்.
பேரா-தைராய்டு சுரப்பி:-
பேரா-தைராய்டு சுரப்பி சிறிய பகுதிகளைக் கொண்டது. தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். பேரா-தார்மான் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரத்தக் கால்சியத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது.
இது நிறைய கால்சியத்தைத் திரும்ப கிரகிக்க, சிறுநீரகங்களை ஊக்குவிக்கிறது. எலும்பிலுள்ள கால்சியத்தை இரத்ததிற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது.
பேரா-தார்மோன் குறைவினால் ஏற்படும் கேடுகள்:-
சிறுநீரில் கால்சியம், பாஸ்பரஸின் அளவு குறையும், சுவாசம் வேகமாகவும், சத்த த்தோடும் இருக்கும். இதய துடிப்பு அதிகரிக்கும் உடலின் வெப்ப நிலை உச்ச நிலை அடையும் தசைகளில் இழுப்பு ஏற்படும். சுவாசத்திற்கான தசைகள் சுருங்கி விடுவதால் மரணம் ஏற்படும்.
போரா-தார்மோன் அதிகம் சுரப்பதால் பலவீனம், தசைகள் இயக்கம் குறைதல், வாந்தி, மனக்கோளாறுகள் ஏற்படுவதுடன் மற்றும் சிறுநீர் அதிகமாகக்கழியும்.